500 மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 20 நிமிடங்கள் ஃபோனிக்ஸ் பாடல்களை பாடி உலக சாதனை படைத்தனர். நடிகை தேவயானி பங்கேற்று சான்றிதழ் வழங்கினார்.
சென்னையில் 500 மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 20 நிமிடங்கள் ஃபோனிக்ஸ் பாடல்களை நடனத்துடன் பாடி உலக சாதனை படைத்துள்ளனர். இதனை கிட்ஸ் வேர்ல்ட் ஃபவுண்டேஷன் கே டபிள்யு எஃப் (K W F ) வேர்ல்ட் ரெக்கார்ட் அச்சுபுக் என்ற நிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் சுதா அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை தேவயானி பங்கேற்று வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலைமாமணி அபிராமி ராமநாதன், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி, வழக்கறிஞர் லஷ்மிராஜா மற்றும் சொப்னாபாபு, ராகவி செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
