மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் கட்டுகட்டாக பணமும் ,நகையும் கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது உதவியாளர் மற்றும் நடிகையுமான அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறையினரிடம், பெல்கஞ்யா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு மேலும் ஒரு வீடு உள்ளதாக அர்பிதா முகர்ஜி தெரிவித்தார். அந்த வீட்டில் நடந்த சோதனையில் மொத்தம் 27 கோடியே 90 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் லாக்கர் அறையை திறந்தபோது அங்கு தலா ஒரு கிலோ எடைகொண்ட 3 தங்க கட்டிகள், தலா 1/2 கிலோ எடைகொண்ட 6 தங்க காப்புகள், தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன பேனா ஆகியவை இருந்தது. மேலும் அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் 49.80 கோடிரூபாய் பணத்தையும், 6 கிலோவுக்கு அதிகமான தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான நடிகை அர்பிதா பானர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.