பிகார் பல்கலை ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. அதனுடன் இணைந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.