• Wed. Mar 19th, 2025

சிவகங்கை கிராம மக்களை பாராட்டிய மோடி… காரணம் என்ன?

By

Aug 29, 2021 , ,

சிவகங்கை அருகே குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

வானொலியில் மனதின் குரல் என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார். அப்போது சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் மக்கள் உதவியுடன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் காஞ்சிரங்கால் மக்கள் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து இந்திய இளைஞர்களை வெகுவாக புகழ்ந்து பேசிய பிரதமர் ஒலிம்பிக்கில் அவர்கள் புரிந்த சாதனைகளையும் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத்துறையிலிருந்து விண்வெளித்துறை வரை இந்திய இளைஞர்கள் புதிய இலக்குகளை நோக்கி ஆர்வத்துடன் பயணித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.