• Tue. Apr 30th, 2024

சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவை போற்றும் தியாகப் பெருஞ்சுவர் அடிக்கல் பூமி பூஜை…

இந்திய தேச விடுதலைக்காக தன் உயிர் தியாகம் செய்த இந்து, சீக்கிய, பார்சி இஸ்லாமிய, கிறிஸ்தவ என அனைத்து மதத்தவர்களின் தியாகம் போற்றும் வகையில். தியாகிகளை நினைவு கூறும் விதமாக, அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சக்ரா விஷன் இந்தியா பவுன்டேஷன் டிரஸ்ட் சார்பில் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் பூமி பூஜை விழா இன்று கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடைபெற்றது-இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாண்டிச்சேரி மாநில சபாநாயகர். ஏம்பலம் ஆர்.செல்வம், பாஜக துணைத் தலைவர், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான.நைனார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கல் நாட்டினர்.

கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பாரதத்தின் பிரசித்தி பெற்ற 75 இடங்களில் இந்த தியாகப் பெருஞ்சுவர் அமைய இருக்கிறது. ஜம்மு,காஷ்மீர், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேச மாநிலங்களில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. இந்த தியாகப் பெருஞ்சுவர் 10 அடி உயரத்தில் 60 அடி நீளத்தில் பாரதமாதாவின் திருஉருவத்துடன் அமைக்கப்படுகிறது. தியாகப் பெருஞ்சுவரின் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நமது தேசியக்கொடி பறக்கவிடப்பட இருக்கிறது. தேச விடுதலைக்காக போராடிய அனைத்து மாநில போராட்ட வீரர்களில், முக்கியமான 1040 வீரர்களின் பெயர்கள் தனித்தனியாக கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டு, இந்த தியாகப் பெருஞ்சுவரில் பதிக்கப்படுகிறது. அதன் தொடக்கப் பணி இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தின் தன் உயிரை நீர்த்த தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேசன் சார்பில் தியாக பெருஞ்சுவர் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,பாண்டிச்சேரி சட்டமன்ற பேரவை தலைவர், ஏம்பலம் ஆர்.செல்வம், பாஜக மாநில துணைத்தலைவர் நைனா நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கல் நாட்டு சிறப்பித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *