எளிய குடும்பத்தில் பிறந்து மூன்று முறை குஜராத்தின் மாநில முதலமைச்சராக இருந்து, இரண்டு முறை பாரத பிரதமராக இருந்திருக்கிறார் என்று சொன்னால், அதில் உழைப்பு,உண்மை,நேர்மை,நியாயம்,தர்மம் உள்ள ஒரு பாரதப் பிரதமர் மோடி தான் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரை ஆதரித்து, நடிகர் சரத்குமார் தனியாக பிரச்சாரம் செய்தார்.

மீனாட்சி நகர் பகுதியில், சரத்குமார் பேசும்போது:
தேசிய ஜனநாயக கூட்டணி முன்னாடிகளே இந்த பரப்புரையில் கலந்து கொண்டிருக்கின்ற மாவட்டத் தலைவர் சசிகுமார், டிடிவி, ஒ.பி.எஸ் உடைய சொந்தங்களே, தாய்மார்களே நண்பர்களே.ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வந்திருக்கின்றேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி. நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாரதப் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் இது. சட்டமன்ற தேர்தல் கிடையாது. மத்தியிலே ஒரு சிறந்த ஆட்சி பத்தாண்டு காலம் ஆட்சி தொடர வேண்டும். மோடியின் ஆட்சி தொடர வேண்டும். இங்கே எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லாமலேயே, மோடி, தமிழ்நாட்டிற்காக இந்த ஐந்து வருடத்தில் 10 லட்சம் கோடி நிதி உதவி செய்திருக்கிறார். ஆனால், எதிரில் இருக்க இந்திய கூட்டணி அதை எல்லாம் மறைத்து தாங்க செய்த திட்டமாக அறிவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எளிய குடும்பத்தில் பிறந்து மூன்று முறை குஜராத்தின் மாநில முதலமைச்சராக இருந்து, இரண்டு முறை பாரத பிரதமராக இருந்திருக்கிறார் என்று சொன்னால், அதில் உழைப்பு, உண்மை, நேர்மை, நியாயம், தர்மம் உள்ள ஒரு பாரதப் பிரதமர் தான் மோடி.
2025 அதிகமான இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா என்ற கருத்துக்கணிப்பு சொல்லும்போது அந்த இளைஞர்களை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்று சொன்னால், ஒரு நல்ல ஆட்சி இருக்க வேண்டும் அந்த ஆட்சிக்கு நல்ல தலைவர் இருக்க வேண்டும். நல்ல ஆட்சியும் இருக்கிறது. நல்ல தலைவரான மோடி, இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி வருங்கால இளைஞர் வருங்கால சந்ததிய பொருளாதார அடிப்படையிலும் வாழ்வாதார அடிப்படை உயர்வதற்கு மோடி ஆட்சி மீண்டும் வரவேண்டும். அதற்கு அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
இங்கு உங்கள் வேட்பாளர் ராதிகா சரத்குமார், மோடி-யால் சுட்டிக்காட்டப்பட்ட வேட்பாளர்,அண்ணாமலையால் சுட்டிக்காட்டப்பட்ட வேட்பாளர் கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராதிகா சரத்குமார்.., படித்தவர்,பண்புள்ளவர்,நிர்வாக திறமை உள்ளவர், தொழில் ஸ்தாபனத்தை நடத்திக் கொண்டிருப்பவர். அதை தன் மகளிடம் ஒப்படைத்துவிட்டு 100% நான் மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன் என்ற உத்தரவாதத்தை தந்த பிறகு இங்கு வேட்பாளராக நிற்கிறார் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும், அதை ஆய்வு செய்து ஆராய்ந்து உங்கள் குரல்களை பாராளுமன்றத்தில் உரக்க சொல்லுகின்ற ஒரு திறமை வாய்ந்தது தான் ராதிகா சரத்குமார் என்று சுட்டிக்காட்டி அவருக்கு இந்த முறை ஒரு வாய்ப்பு தந்து,
கேட்டுக்கொண்டு விடை பெறுகின்றேன். 19ஆம் தேதி தேர்தல் வாக்கு பெட்டியில் ராதிகா படம் இருக்கும் அவர்கள் பெயர் இருக்கும் பக்கத்தில் தாமரை சின்னம் புத்தாண்டு இருக்கும் அந்த பட்டனை அமைக்கிட்டிங்கனா ராதிகா சரத்குமார் உங்களை தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு பெறுகின்றேன். நிச்சயமாக உங்களுக்கு முழுமையாக உழைக்க தோளோடு தோல் நின்று அனைத்து பிரச்சினையும் தீர்வு காண உழைப்பார் என நடிகர் சரத்குமார் பேசினார்.
