• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்..!

Byவிஷா

Feb 20, 2023

வருகின்ற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மாதிரி வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் பயனபடுத்தப்படவுள்ள 280 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன