• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாங்குநேரி பெரியகுளத்திற்கு ஆபத்து-ஆக்ஷனில் இறங்கிய எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகரன்…

ByK.RAJAN

Aug 27, 2024

நாங்குநேரி பெரியகுளம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தின் கரைகள் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. தற்போது குளத்தின் கரைகளில் உள்ள கற்கள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அடுத்த மழை வந்தால் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேறி பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். அதனை அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் எம்எல்ஏ நேரில் சென்று குளத்தை பார்வையிட்டு பலவீனமாக உள்ள கரைப்பகுதிகளை உடனே பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது கரைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்வி.கிருஷ்ணன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் செல்லப்பாண்டி, மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சாந்தாகுமாரி, மறுகால்குறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் புஷ்பபாண்டி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்எஸ் சுடலைக்கண், நாங்குநேரி மேற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் வழக்கறிஞர் பேச்சிமுத்து, பெரியகுளம் விவசாய சங்க தலைவர் செந்தூர்பாண்டி , மாவட்ட பொதுச் செயலாளர் ஓபேத், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடையார், வி.எஸ். உடையார் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.