மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில் வாடிப்பட்டி யின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரில் கழிவு நீர் கலந்து வெளியேறி செல்ல முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கழிவுநீர் வெளியேறி செல்லக்கூடிய பகுதியான அமுக்கு பாலம் பகுதியில் சோழவந்தான் எம்வி கருப்பையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் உடனடியாக பணிகளை துவக்கி வைத்தார். ஜேசிபி எந்திரம் மூலம் வாடிப்பட்டி நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் அமுக்கு பாலம் வழியாக வெளியேறச் செல்லக்கூடிய கால்வாய் பகுதி முழுவதையும் ஆய்வு செய்த எம்எல்ஏ ஜேசிபி எந்திரம் மூலம் உடனடியாக பணிகளை துவக்கி வைத்தார்.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீர் வெளியேறி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏ உடன் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் தியாகராஜன் தமிழன் தாமு பேரூர் நிர்வாகி பசுமணியன் வழக்கறிஞர் அழகேசன் மதுரை மேற்கு சரவணன்கொரியர் கணேசன் கேபிள் மணி வெல்டிங் மாரிவார்டு செயலாளர் உமா லட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர்.





