மதுரை விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து முதல்வரை வரவேற்றனர்.

மதுரையில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து தனி மானம் முதன் முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் தியாக ராஜன் , மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாநகர காவல் ஆணையர் லோக ராஜன் மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் வரவேற்பளித்தனர்.


பின்னர் வேன் மூலம் முதல்வர் தனியார் விடுதிக்கு புறப்பட்டு சென்றார் . மதுரை விமான நிலையம் பெருங்குடி, பெருங்குடி சந்திப்பு மண்டேலா நகர் சந்திப்பு,ரிங் ரோடு பகுதிகளில்ஏராளாமான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் .




