• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மியாவாக்கி காடு அமைக்கும் பணிகளை – கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் துவக்கி வைத்தார்…

ByKalamegam Viswanathan

Sep 26, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பசுமை மன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் ஏற்கனவே மியாவாக்கி காடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். தற்போது பெரியகுளம் கண்மாயின் கரைகளில் சுமார் 6 ஆயிரத்து, 100 சதுரஅடி பரப்பளவில், 2 ஆயிரத்து 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்வதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், கோஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஆனந்த்குமார் கண்மாய் கரைகளில் மரக்கன்று நடும் பணிகளை துவக்கி வைத்தார். இதனையடுத்து மேயர் சங்கீதா இன்பம் கூறும்போது, சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் திரு.விவேகன்ராஜ் மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.