• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம்தென்னரசு-ராஜகண்ணப்பன் பிரச்சாரம்

ByG.Ranjan

Apr 10, 2024

இராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு – ராஜ கண்ணப்பன் பேசினார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியை சேர்ந்த காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக் கூட்டத்தில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள், பொன்னுத்தம்பி சந்தன பாண்டியன் நரிக்குடி ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மல்லாங்கினர் பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் ,சிவசக்தி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி, ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முகமது முஸ்தபா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசர் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், புதுப்பட்டி ஊராட்சி மன்ற .துணைத்தலைவர் ஜெய்கணேஷ் உள்பட கலந்து கொண்டனர்.