• Sun. Mar 16th, 2025

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி துரை வைகோ-க்கு வாக்கு சேகரிப்பு

Byகதிரவன்

Apr 1, 2024

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ தனது சின்னமான தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்களநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர்கள்
கே .என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த ஜீப்பில் நின்றவாரு வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உரையாற்றிய துரை வைகோ ….

திருநெடுங்களநாதர் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் இருந்து பிரச்சாரத்தை துவக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

திமுக அரசு கொடுத்த 100 சதவீத வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு முன்பாக சிலிண்டர் விலை ரூ.400 யாக இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்ட சூழலில் தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டது. பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்திய கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த உடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தமிழக முதல்வர் உறுதிமொழி கொடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார். மத்தியில் ஆளும் பாஜக கடந்த பத்தாண்டு காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை வருமென்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ஒரு செங்கலை கூட நடவில்லை. தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்கவில்லை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.