• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்…

திமுக இளைஞர் அணி சார்பில் சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு இருசக்கர வாகன பிரச்சார பேரணியை கன்னியாகுமரியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர வாகனம் ஓட்டி தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியை அடுத்து கன்னியாகுமரி (கி) மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலர்குழு தலைவருமான திரு பிரபா ஜி.இராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையை மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.