• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

புதிய புறநகர் பேருந்து வழித்தட சேவையை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

ByK.RAJAN

Mar 16, 2024

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர், கல்குறிச்சி , காரியாபட்டி வழியாக மதுரைக்கும், மதுரையில் இருந்து திருப்புவனம் , A.முக்குளம் , நரிக்குடி வழியாக வீரசோழனுக்கும் புதிய புறநகர் பேருந்து வழித்தட சேவையை வீரசோழன் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் துவக்கி வைத்தார்.

புதிய புறநகரப் பேருந்து வழித்தடங்கள் விபரம்

1) விருதுநகர் – மதுரை (வழி) மல்லாங்கிணர், கல்குறிச்சி,காரியாபட்டி)

விருதுநகரில் இருந்து ;

காலை 6 : 25 மணி
இரவு 8 : 05 மணி

மதுரையில் இருந்து ;

மாலை 6 : 30 மணி
இரவு 9 : 40 மணி

2) மதுரை – வீரசோழன்
(வழி) திருப்புவனம் , A.முக்குளம் , நரிக்குடி )

மதுரையில் இருந்து ;

காலை 8 : 00 மணி:
மதியம் 1 : 10 மணி

வீரசோழனில் இருந்து ;
காலை 10 : 20 மணி
மாலை 4 : 25 மணி