விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீட்டிற்க்கான வேலை ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவுடன் காலதாமதமின்றி உடனடியாக அரசாணை வழங்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் மூலமாக 187- பயனாளிகளுக்கு ரூபாய் 6 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,
மக்களுக்கு சமூக நீதிகளை தர வேண்டும் என்றால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுதான் அரசின் தலையாய கடமையாகும். கடந்த 1970 -ல் கலைஞர் கருணாநிதி முதல் முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆதிதிராவிடர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 2006-ல் மீண்டும் அவரே முதல்வர் ஆனவுடன் குடிசை மாற்று வாரியம் மூலமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
பின்பாக வந்த பத்தாண்டு கால( அதிமுக ) ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு தற்போது தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மீண்டும் செயல்படுத்த தொடங்கி நடந்து வருகிறது. இதில் வீடு பழுது பார்க்க வீடுகளுக்குண்டான மறுக்கட்டுமான திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவுடன் காலதாமதமின்றி உடனடியாக அரசாணை வழங்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. ஒரு காரியத்தை தொடங்கி வைப்பது பெரிதல்ல அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். புண்ணியவான் ஸ்டாலின் ஆட்சியில் நமக்கு வீடு கிடைத்தது என மக்கள் மனதளவில் நினைக்க வேண்டும்.