திமுக தமிழ்நாட்டில் உள்ள வேட்பாளர்கள் அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு தற்போது உள்ள அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் அவர்களை மீண்டும் இந்த தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில் இன்று மாலை அவர் சென்னையில் இருந்து சொந்த ஊரான ஆலங்குடிக்கு வந்தார். வரும் வழியில் சட்டமன்ற தொகுதியின் எல்லை ஆன கேப்பறை என்ற இடத்தில் கட்சியின் தொண்டர்கள் அவரை வரவேற்க கூடியிருந்தனர். காரில் வந்து இறங்கிய அவரை மாலை அணிவித்தும் பயனாடைகள் அணிவித்தும் பூங்கொத்துக் கொடுத்தும் வரவேற்றனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த இடத்தில் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்தார். 2021 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக திமுக தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வரும்போது தான் இந்த மண்ணைத் தொட்டு கும்பிடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது ஒன்றியச் செயலாளர்கள் அரு.வடிவேல், கே.எஸ்.ரவி, தங்கமணி, மகேஸ்வரி சண்முகநாதன், துரைக்கண்ணு, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சரிதா மேகராஜன் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களும் கலந்து கொண்டனர்.




