• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

3.5 கோடி மதிப்பீட்டில் மின் வினியோக வளர்ச்சித் திட்டம் அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார்

ByA.Tamilselvan

Jun 18, 2022

திருக்கோவிலூர் அருகே 3.5 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக வளர்ச்சித் திட்டத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயந்தூர் ஊராட்சியில் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக வளர்ச்சித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு 3.5 கோடி மதிப்பிலான மறுசீரமைக்கப்பட்ட மின் வளர்ச்சித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக முதல் அமைச்சர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட்டையும் அவர்களுக்கென ஒரு தனி துறையையும் உருவாக்கியுள்ளார் . கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.. மின் வினியோக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 600 விவசாயிகளும், ஐயாயிரத்துக்கு மேற்பட்டோரும் பயன் பெறுவார்கள். என்றும் இந்த திட்டம் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.