• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

ByG.Suresh

Dec 21, 2023

தென் தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மூன்று கட்டங்களாக மொத்தம்13295 உணவு பொட்டலங்கள்7250 ரொட்டி மற்றும் ரஸ்க் பெட்டிகள், இது தவிர டவல், நாப்கின்ஸ், மெழுகுவர்த்தி, தண்ணீர் பாட்டில்கள் உள்பட ரூ பதினாறு லட்சம் மதிப்பிலான பொருட்கள் மூன்று தடவையாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுமார் ஐந்தாயிரம் உணவு பொட்டலங்கள் அடுத்த கட்டமாக நிவாரணமாக அனுப்பிவைக்கப்பட உள்ள நிலையில் திடீரென கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் உணவு தயார் செய்யப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்டு தயார் செய்யப்படும் இடத்தில் போதுமான வசதிகள் உள்ளதா என சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் அடுத்த கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்புவது குறித்தும் தேவைப்படும் பொருட்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் கலந்துரையாடினார் இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.