குமரி கடல் பாலத்தை ரசித்து பார்த்த அமைச்சர் நாசர். இன்று வரை 3_லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை.
கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் முகாமில், தமிழக முதல்வர் ஆணைப்படி முதல் கட்டமாக 172_வீடுகள் ரூ.11.44 கோடியில் கட்டப்பட்ட புதிய வீடுகளில் குடியமர்வு குடும்பங்களுக்கு வீட்டின் சாவியை வழங்கும் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர், குமரி ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்ற நிகழ்விற்கு பின்,

அமைச்சர் நாசர், குமரி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் உடன் செல்ல தனிப்படகில், புத்தாண்டின் போது தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் பாலத்தை காண சென்றார். திருவள்ளுவர் சிலை பாறை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பரப்பின் மீது ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்ட கண்ணாடிப் பாலத்தை காண்பதற்கு முன்பாக, வான் தொடும் உயரத்தில் உயர்ந்த “உலகப்பொதுமுறை” தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை பாதங்களை தொட்டு வணங்கிய பின், உயர்ந்து நிற்கும் அய்யனை, அமைச்சர் கண்களால் தரிசனம் செய்த பின் கண்ணாடி பாலத்திற்கு வந்த அமைச்சர் காலடிகளை கழற்றி விட்டு கண்ணாடி பாலத்தின் நடுவே நீண்ட கண்ணாடி பதிவின் பாதையில் நடந்தவாறு,


கண்ணாடி வழியாக தெரியும் நீலக் கடல் நீரில் எழுந்து வந்த அலைக் கூட்டத்தின் அழகை ரசித்த அமைச்சர் நாசர் உடனிருந்த அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு மற்றும் குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் இடமும். கலைஞர் உருவாக்கிய பூம் புகார் கண்ணகி கோவிலையும், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் வான் மேகங்கள் தொட்டு செல்லும் உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை ஒரு சரித்திர சாதனை போல், அவரது தனயன் நம்முடைய முதல்வர் தளபதி, கலைஞர் அடி தொட்டு செய்துள்ள கன்னியாகுமரியில் கடல் பாறைகளின் இடையே கண்ணாடி இழை பாலம் தமிழகத்திலே முதலாவதாக அமைக்கப்படிருப்பதை வெகுவாக பாராட்டினார்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் அதிகாரியிடம் கண்ணாடி இழை பாலத்தை இதுவரை எத்தனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளார்கள் என கேட்டதும் நேற்று வரை(ஜனவரி_ பெப்ரவரி 16)ம் தேதிவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 718_ பேர் பார்த்துள்ளார்கள் என்ற அதிகாரியின் தகவலை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அமைச்சர் படகு பயணத்தின் போது அதன் பாதுகாப்பு கவசத்தை அணிந்தே படகு பயணம் செய்தார்.


கண்ணாடிப் பாலத்தை அமைச்சர் பார்த்துக் கொண்டு இருந்தை பார்த்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும்,மலோசியாவில் இருந்து வந்திருந்த 10_க்கும் அதிகமான பேர் அமைச்சர் நாசருடன் நிழல் படம் எடுத்துக் கொண்டனர். சில இளைஞர்கள், இளம் பெண்கள் அவர்களது கை பேசியில் அமைச்சர் நாசருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அமைச்சர் மலேஷியா சுற்றுலா பயணிகளிடம்,மலோஷியாவில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று கேட்டார். தலைநகர் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்கள்.

கன்னியாகுமரி கடல் பாலத்தை அயலக துறை அமைச்சர் நாசர் பார்வையிட்ட நேரத்தில் மலேஷியா மக்களும் எதிர் பாராத சூழலில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது. சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் நடந்தது என்பது மிகப் பொருத்தமாக இருந்தது.
