மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்

வாடிவாசல் பகுதி, காளைகள் பரிசோதனை மையம் காளைகள் சேகரிப்பு மையம் ஆகியயிடங்களில் பார்வையிட்டு ஆய்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறியதாவது:
கடந்த முறையை விட இந்த முறை அனைத்துப் பணிகளும் மிக விரைவாகவும், முன்கூட்டியேவும் முடிக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நண்பர்கள் எந்தக் குறையும் சொல்லாத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.
உள்ளூர் இப்போட்டியில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்துப் பொறுத்திருந்து பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டது.
சுமார் 1000 மாடுகள் வரை அவிழ்க்கும் வகையில் வாடிவாசல் மற்றும் தடுப்பு வேலிகள் (Barricades) பலப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றம் விதித்துள்ள 65 கோரிக்கைகள் மற்றும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே அரசு ஜல்லிக்கட்டை நடத்தும் என உறுதி அளிக்கப்பட்டது.
கிராம மக்கள் மற்றும் அனைத்துச் சமுதாய மக்களும் ஒன்றிணைந்து, எவ்விதப் பாகுபாடுமின்றி இந்தப் போட்டியை நடத்துவோம் என அமைச்சர்கள் கூறினர்.
“சட்டத்திட்ட விதிக்கு உட்பட்டு, அரசு ஜல்லிக்கட்டு கிராம மக்களின் முழு ஆதரவோடு சிறப்பாக நடக்கும்.” என அமைச்சர் மூர்த்தி கூறினார்.




