சுவாமி தோப்பு தலைமை பதியின் பூஜித குரு பால பிரஜாபதியை சந்தித்து
அமைச்சர் மனோதங்கராஜ் வாழ்த்துகள் பெற்றார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அய்யா வைகுண்டர் அன்பு வனம் வருகை தந்து குருமகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அன்புவனம் வருகைதந்த அமைச்சரை ஆர்.எஸ்.பார்த்தசாரதி, அன்புவனனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் பொன்.ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.