• Thu. May 2nd, 2024

அமைச்சர் மனோ தங்கராஜ் பொய் சொல்கிறார். பொன்னார் குற்றச்சாட்டு.

கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கர வாத இயக்கம், ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம் என காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு மனோ தங்கராஜ் , விஜய் வசந்த் ஆகியோர் பதில் சொல்லட்டும். கூட்டணியில் வைத்து கொண்டு ஒரு கட்சியை திருடன், கள்ளன் என தூற்றி கிட்டே இவர்கள் பயணம் பண்ணுவாங்களா என கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி..,

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின்
பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சிப்பாறை பகுதியில் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை திட்டம் திமுக கொண்டு வந்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் தவறான தகவல்களை சொல்லி பொய் பிரச்சாரம் செய்கிறார்.

அது 2003 ஆம் ஆண்டு நான் எடுத்த முயற்சி. அதன் பிறகு தான் டி. ஆர். பாலு 2004 மே மாதம் அமைச்சராக பொறுப்பேற்றார்.

மனோ தங்கராஜ் ஒரு மந்திரியா? ஒரு அமைச்சரைவையில் ஒரு திட்டத்தை கொண்டு வர எவ்வளவு நாள் ஆகும் என்பது அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு தெரியாதா? அதுவும் பல ஆயிரம் கோடி திட்டத்தை உடனே கொண்டு வர முடியுமா?

டி. ஆர். பாலு பின்னாடி வந்தாரு. பிறகு பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.

என்னைக்குமே கன்னியாகுமரி மாவட்டத்தை ஏமாற்றி பிழைக்க கூடிய வகையில் ஒரு அமைச்சர் இருந்தால் என்ன செய்ய முடியும் ? நான்கு வழி சாலை பணிகளை பசுமையை பாதுகாக்க என கூறி நீதி மன்றத்தில் ஸ்டே வாங்கி தடுத்தவர் மனோ தங்கராஜ் எனவும், தற்போது இயற்கையை பாதுகாக்க வேண்டிய அமைச்சர் மனோ தங்கராஜ் மலைகளை உடைத்து கனிம வளங்களை ஆயிரக்கணக்கான லாரிகளில் கடத்தி கொண்டு செல்கிறார், அதற்கு மனோ தங்கராஜ் துணையாக நிற்கிறார். இவர் கனிம வளத்தையும் இயற்கையும் காப்பற்ற போறாரா எனவும் மனோ தங்கராஜ் மீது பொன். ராதாகிருஷ்ணன் சாடி உள்ளார்.

கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கர வாத இயக்கம், ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம் என காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு மனோ தங்கராஜ் , விஜய் வசந்த் ஆகியோர் பதில் சொல்லட்டும். கூட்டணியில் வைத்து கிட்டு ஒரு கட்சியை திருடன், கள்ளன் என தூற்றி கிட்டே இவர்கள் பயணம் பண்ணுவாங்களா எனவும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்,

தொடர்ந்து, மதுரை aims மருத்துவமனை பணிகள் விரைவில் முடிவடையும் , aims வந்தாக வேண்டும்.

வசந்த் என்ற பெயரை கேட்டாலே பொன்னாருக்கு மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கே பயம். இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்ட சரித்திரத்திலேயே கிடையாது. வசந்த குமார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சாலை பணிகள், வளர்ச்சி திட்டங்களை பற்றி அவரிடம் மக்க்கள் கேட்டால் பொன்னாரிடம் கேளுங்கள் இப்படி சொன்னவர்.

மக்களை பிளவுபடுத்தி அரசியல் நடத்தி ஆதாயம் தேடி கொண்டிருப்பவர்கள் திமுக கூட்டணி. மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை செழிப்படைய செய்ய வேண்டும் என்று செயல்படுபவர்கள் பாஜக. இதற்கும் மேல நாம் ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தி குளிர் காய காங்கிரஸ், திமுக கட்சிகள் நினைக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள 20 லட்சம் மக்களும் வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், வீழ்ந்தால் ஒன்றாக வீழ்வோம். இது தான் நம்முடைய கொள்கை லட்சியம் எனவும் அவர் தெரிவித்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *