தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கத்தொகையாக ரூ.3000 மற்றும் வேட்டி மற்றும் சேலைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளார்கள்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி மற்றும் சேலைகள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்று 08.01.2026 முதல் காலை 9.00 மணி முதல் 1.00 வரையிலும் பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 வரையிலும் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும்.
இதற்காக 09.01.2026 நியாய விலைக் கடைகளுக்கு வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்களுக்கு (1,93,921) இன்று முதல் வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கள் அவர்கள் இன்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொப்பினை துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




