• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோவையில் காலை உணவு திட்ட விரிவாக்க திட்டத்தை துவக்கி மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்..,

BySeenu

Sep 22, 2026

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் மாணவர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஜெனி அகல்யா எனும் மாணவி குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வாங்கியதற்கு மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சம்பத்குமார் தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, கோவை மாவட்டத்தில் 501 பள்ளிகளில் புதிதாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் 56,560 மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

கோவை இட்லி பாட்டிற்கு ஈரான் போர் காரணமாக சிலிண்டர் கொடுப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருந்தது என்றும் தற்பொழுது பாட்டிக்கு சிலிண்டர் விநியோகம் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அந்த தனியார் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.