• Sat. Jun 3rd, 2023

கன்னியாகுமரியில் 2 புதிய படகு சேவை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி பூம்புகார் கழகத்தில் இரண்டு புதிய படகு சேவையை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ், மாநில துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு, நேற்று முதல் படகுகள் சேவை தொடக்கம் அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோதங்கராஜ் ஆகியோர் படகுகள் சேவையை தொடங்கி வைத்தனர் 6 கடல்மைல் தொலைவு வரை படகுகள் இயக்கப்பட உள்ளன. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் நவீன சொகுசு படகு சேவை வழங்கப்படுகிறது 2 சொகுசு படகுகளுக்கு தாமிரபரணி, திருவள்ளுவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *