• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பரப்புரையில் தமிழிசையை கிண்டலடித்த அமைச்சர் துரைமுருகன்

Byவிஷா

Mar 29, 2024

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா என பாஜக வேட்பாளர் தமிழிசையை கிண்டலடித்துப் பேசியுள்ளார்.
தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன், இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டு தென் சென்னையில் தமிழிசை போட்டியிடலாமா? அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா? எனக்கு முன்பே தெரிந்திருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என போன் போட்டு சொல்லி இருப்பேன் என கிண்டல் அடித்துள்ளார்.