• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மின்னல் தாக்கி சிகிச்சையில் 4 சிறுவர்களை அமைச்சர் ஆறுதல்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக கோவில்பட்டி கயத்தார் விளாத்திகுளம் சாத்தான்குளம் திருச்செந்தூர் ஆத்தூர் ஏரல் முக்காணி முள்ளக்காடு முத்தையாபுரம் ஓட்டப்பிடாரம் மணியாச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. முத்தையாபுரம் முள்ளக்காடு ஆத்தூர் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.

இந்தநிலையில், முள்ளக்காடு ராஜுவ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் தங்க முத்து (18), பொன் முத்து மகன் அன்பரசன் (18) பொன் செல்வம் மகன் ஆனந்த கிருஷ்ணன் (17), ஜான் பால் மகன் பிரின்ஸ் (17) ஆகிய 4பேரும் முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்னல்  தாக்கியதில் 4பேரும் காயம் அடைந்தனர். அப்போது அருகில் கடலில் குளித்து கொண்டிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின்னல் தாக்கி சிகிச்சை பெற்று வரும் 4 சிறுவர்களையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

சிகிச்சை அளிக்க மருத்துவர்களை தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோரிடம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிதி உதவியும் வழங்கினார்.  இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.