• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம்

BySeenu

Apr 11, 2024

கோவை மாசக்காளிபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றுகிறார்.

அப்பொழுது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு

கருப்பு கண்ணாடி – தேர்தல் கால்லங்களில் பணியாற்றும் போது இரவு கால பிரசாரத்தில் பூச்சி பட்டு ஒளியை பார்க்க முடியாத நிலை, மருத்துவர் ஆலோசனையில் கட்சி தான் முக்கியம் என பிரசார பணியில் ஈடுபட்டுள்ளேன்
கலைஞரை பிடிப்பதாலும் கருப்பு கண்ணாடி போட்டுள்ளேன் கோவை மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்றபடி வெற்றிபெற வேண்டும்.கோவைக்கும் கொரோனாவுக்கும் இணைப்பு உள்ளது, மருத்துவமனைகள் இடமே இல்லாத காரணத்தில் திருவண்ணாமலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கோவையில் தான் அனுமதிக்கப்பட்டனர், உயிரை காப்பாற்றிய ஊர், மோசமான தொற்று காலத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்தோம் முகக்கவசம் போட்டு தான் வாக்களித்தோம்,பணம் கஜானாவில் எவ்வளவு இருக்கிறது என்ற முதல்வர் கேள்விக்கு, காலி என்று பதில் வந்தது, 6,28,000 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது எடப்பாடி அரசு வைத்திருந்தது.
மருத்துவர்களே கொரோனா காலத்தில் சிகிச்சை செல்ல அச்சப்பட்ட காலத்தில், முதல்வர் கோவையில் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்காமல் நோயாளிகளை சென்று நலம் விசாரித்தார், அந்த ஊக்கத்தால் மறுநாள் மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரிகளிலும் மருத்துவர்கள் சென்றதால் கொரோனா விரட்டியடிக்கப்பட்டது, இந்தியாவிலேயே வேகமாக கொரோனா விரட்டி அடிக்கப்பட்டது.
தமிழகத்தில் பட்டின சாவு வந்துவிடும் என சட்டமன்றத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் கேட்டோம், எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லவில்லை.”வீரப்பன் மாதிரி சிரிப்பவர் எடப்பாடி ” பணம் இல்லை என சொன்னார்,கையெழுத்து போடும் அதிகாரம் வந்தவுடன் ரூபாய் 4000 தருவேன் என சொன்ன முதல்வர் ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தவுடன் கடன் இருந்தபோது முதல் கையெழுத்தாக போட்டார்.

பெண்கள் படிக்கும் முறை கலைஞர் காலத்தில் துவங்கியது.புதுமை பெண் திட்டம், மகளீர் உரிமைத்தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என உலகத்திற்கு வழிகாட்டும் திட்டங்களை முதல்வர் கொடுத்து வருகிறார்.கனடா நாட்டில் அறிமுகப்படுத்த காலை சிற்றுண்டி திட்டம் மேம்பாலங்கள் திட்டங்களை அறிவித்தால் போதுமா? 10% பணிகள் தான் அதிமுக துவங்கிய நிலையில், 70% பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் 430 பணிகள் சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் 998 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.172 கோடி திட்ட மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன.1691 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பணிகள் நடந்து வருகின்றன
அதிமுக கடன் வைத்துவிட்டு போன நிலையிலேயே இத்தகைய பணிகளை திமுக அரசு கொடுத்துள்ளது.கோவை மக்கள் மீது என்ன அக்கறை வாக்கு கேட்கிறீர்கள்?2014 ல் பிரதமராக விலைவாசி உயர்வுக்கு காரணம் யார்? இந்திய அரசு வரி போடுவதால் விலை வாசி உயர்ந்துள்ளது? 2014 ல் அரிசி 29 ரூபாயாக இருந்தது இன்று 69 ரூபாய், பருப்பு 75 ஆக இருந்தது 180 ஆக விலை உயர்ந்தது, சமையல் எரிவாயு கடுமையாக விலை உயர்ந்துள்ளது.விலைவாசி கட்டுக்குள் உள்ளதா?

பெண்களை பொறுத்தவரை வீட்டில் குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என நினைப்பார்கள் , 2014 ல் 20,000 ரூபாயாக இருந்த தங்கம் தற்போது 30,0000 உயர்ந்து 53,000 விலையாக உள்ளது கலைஞர் ஏற்றுக்கொள்ளாத ஜி.எஸ்.டி., யை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.ஜெயலலிதா மறைவிற்கு பின், வந்த ஓ. பி.எஸ்., எடப்பாடி ஆகியோர் இணைந்து ஜி.எஸ்.டி., க்கு இணைந்து வாக்களித்தால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது.ஜி.எஸ்.டி., மூலம் வசூல் செய்த மாநிலத்திற்கு பணம் வருகிறதா? தமிழகத்தில் மட்டும் 100 ரூபாய் வசூல் செய்து 29 ரூபாய் குறைவாக தரப்படுகிறது, ஆனால் மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேச, ராஜஸ்தான் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் குறைந்த வரி வசூல் செய்து, ஆனால் திருப்பி அதிகளவில் கொடுக்கப்படுகிறது,
மோசமான மழை வெள்ளம் சென்னை சுற்றிய மாவட்டங்கள், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, ஒரு இடத்திற்கு செல்ல 2 நாட்கள் ஆனது; ஜே.சி. பி., யில் ஏறிக்கொண்டு பால், உணவு கொடுத்து சென்றோம், விவசாயத்தை விட அதற்கு தான் அந்த வாகனம் பயன்படுத்தியது; வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்க்கா வந்தபோது பெண்களுக்கு உள்ளே பரிதாப குரலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை அடைந்தார், உயிர்கள் இழப்பை நினைத்து பதைப்பதைத்தார்,3 ஆண்டுகால வட்டியில்லா கடன்களை அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்,
தமிழக மக்களுக்காக குனிந்து பணிந்து அமைச்சரிடம் சொன்னோம், ஏதாவது நிதி வாங்கி தாருங்கள் என கேட்டோம், ஆனால் இன்று வரை ஒரு நிதியும் வழங்கவில்லை, மனிதாபிமான அடிப்படையில் தந்தீர்களா? எங்களிடம் ஜி.எஸ்.டி., வசூல் செய்துவிட்டு மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கிறீர்கள்? அதை தானே கேட்டோம், குஜராத்தில் படேல் சிலை 3000 கோடி ரூபாய் செலவில் , 800 கோடி ரூபாயில் மைதானம், 960 கோடி புதிய பாராளுமன்றம் கட்டியுள்ளனர், அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கலாமா?

ஆனால் பிரதமர் தமிழ் மொழியை பாராட்டுகிறார், பிடித்த மொழி என்கிறார், ஆட்சி மொழியாக தமிழை ஆக்கியிருக்கலாம் அல்லவா? 643 கோடி ரூபாய் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கியபோது, 22 கோடி ரூபாய் மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது, இந்தி மொழியில் தான் புரியாத மொழியில் ஹிந்தி மொழியில் திட்டங்களுக்கு பெயர் வைக்கின்றனர், யாரை ஏமாற்ற தமிழ்மொழி பிடிக்கும் என்கின்றனர்
காங்கிரஸ் பொது நிறுவனங்களை அதிகமாக உருவாக்கினார்கள், வாய்பாய் கூட 17 பொது நிறுவனங்களை உருவாக்கினார்கள் ஆனால் மோடி ஒரு பொது நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை, 27 தனியார் நிறுவனங்களை உருவாக்கினீர்களே, 2.1 கோடி நிறுவனங்கள் மூடப்பட்டு, 20000 பேருக்கு வேலைவாய்ப்பு போயுள்ளது,டிரெய்லர் ஆட்சியில் வேலைவாய்ப்பு இல்லை, கடன் ஆக்கி உள்ளனர், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது, டிரெய்லர் இப்படி என்றால் 2.5 மணி நேர காட்சி காண்பிக்க முடியுமா? நிலைமை என்ன ஆகும்? கோவையின் நிலைமை எம்.எஸ்.எம். இ, முடங்கி உள்ளதற்கு மாநில அரசு காரணமா? மின்சார கட்டணத்தை குறைக்க மாநில அரசால் முடியுமா? உதய் திட்டத்தை கலைஞர், ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லை, எடப்பாடி , தங்கமணி ஆகியோரால் கையெழுத்து போட்டதால், மின்சாரம் உரிமை கொடுத்து விட்டனர்,தமிழக அரசு சிக்கிக்கொள்வதற்கு காரணம் எடப்பாடி தான்
எத்தனை விவசாயத்திற்கு ஓய்வூதியம் வழங்கி உள்ளீர்கள்? இலங்கை அரசால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், வலுவான பிரதமர் இந்தியாவில் இல்லை என சொன்ன நீங்கள் தான் 10 ஆண்டு ஆட்சி செய்து வருகின்றனர், என்ன விடியல் கண்டீர்கள்?
எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?
இந்தியா சுதந்திரம் கிடைக்க இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் போராடினார்கள், ஆனால் சி. ஏ. ஏ., சட்டத்தால் இந்தா உறவு கூறு போடப்படும் என்பதால், அதற்கு எதிராக வாக்களித்தோம், எங்களுடன் இணைந்து அதிமுக, பாமக வாக்களித்திருந்தால் அந்தா சட்டம் நிறைவேற்றபட்டிருக்காது?
மறைமுக மத்திய அரசுக்கு உதவும் வகையில், எடப்பாடி பழனிச்சாமி நீலி கண்ணீர் வடிக்கிறார், இஸ்லாமியர்கள் வாக்குக்காக ஒரு கடையை எடப்பாடி பழனிச்சாமி திறந்துள்ளனர் என தெரிவித்தார்.