• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் மினி மாரத்தான் போட்டி

Byadmin

Sep 11, 2022

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட தடகள சங்கம் மற்றும் ஆண்டிபட்டி மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மினி மாரத்தான் போட்டியை நடத்தியது. ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டி சாலையில் அமைந்துள்ள மகிழ்வனம் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமியிலிருந்து, மாணவ, மாணவிகளுக்கான 10 கிலோமீட்டர், 7.5 கிலோமீட்டர் ,5 கிலோ மீட்டர் ,2.5 கிலோமீட்டர் ,1.5 கிலோமீட்டர் நீளத்திற்கான மினி மாரத்தான் போட்டி கிராம சாலை வழியாக நடைபெற்றது.


இதில் தேனி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர் .அதனைத் தொடர்ந்து ஸ்கேட்டிங் போட்டியும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களுடன் சான்றிதழும் , ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகிழ்வனம் உரிமையாளர் வனிதா , இயக்குநர் ரவிக்குமார் மற்றும் இணைச் செயலாளர் சிவா உள்பட விளையாட்டு குழுவினர் செய்திருந்தனர்.