முசிறியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் முசிறி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது .நிகச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.முசிறி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் சிங்காரம் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தனபால் மாவட்ட இணை செயலாளர் ரேவதி மாவட்ட கழகப் பொருளாளர் எஸ் செந்தில் வேல் முன்னிலை வகித்தனர்.எம்ஜிஆர் மன்ற செயலாளர் அருண் குமார் அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் மணவைக்கோ இப்ராஹிம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் ராஜசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்வில் குணசீலம் பாலசுப்ரமணியன் மேட்டுப்பாளையம் முருகேசன், மன்னச்சநல்லூர் பால்ராஜ் மாவட்ட இலக்கிய அணி ஆதித்ய ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் முசிறி நகர செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்
முசிறியில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
 
               
                               
                  












; ?>)
; ?>)
; ?>)