

கொரோனா காலத்தில் இருந்து சாதாரண ரயில்களில் 10 கட்டணத்தில் இருந்து விரைவு ரயிலுக்கான கட்டணம் 30 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளுக்குப் போராட்டத்திற்கும் பின் 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது பழைய கட்டணம் 10 வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10-ஆக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் ரயில்வே பயணிகளும் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே இந்த கட்டண குறைப்பும், அதற்கு மேல் உள்ள கிலோமீட்டருக்கு இந்த கட்டணம் குறைக்கப்படவில்லை. இது ஏமாற்றும் செயல் என ரயில் பயனாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

