தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் மீன்பிடி விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் கடற்கரை மற்றும் துறைமுகங்களில் மீனவர் விசைப்படகு, மற்றும் வள்ளங்களை பத்திரமாக நிறுத்தி வைத்தனர்-சின்னமுட்டம் ன,குளச்சல், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகஙகளில் இருந்து சுமார் 2200க்கும் மேற்பட்ட விசப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றன,இதில் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு சுமார் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிவிட்டன,400க்கு மேற்பட்ட விசைப்படகுகள் தகவல் கொடுப்பட்டதாகவும் மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இதனால் திரும்பிய படகுகளை மீனவர்கள் பத்திரமாக தரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.








