• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நூலகம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

ByM.S.karthik

Sep 2, 2025

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தி படைப்பாற்றலை மேம்படுத்தும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் மாணவர்கள், தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் தங்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும். இந்நிகழ்வில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் தினேஷ் குமார், துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் சந்தான கிருஷ்ணன், உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் சிவகாமசுந்தரி, நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் சிந்துமதி, உதவித்தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன் மற்றும் அல்ஹாஜ் முகமது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.