• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெற்றி பெற செய்த பொதுமக்களை நேரில் சென்று நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ்

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் அவர்கள் தன்னைத் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பொதுமக்களை வீடு வீடாக நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கரொனா காரணமாக மக்களை நேரில் சென்று நன்றி தெரிவிக்க முடியாத இருந்த சூழ்நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் அவர்கள் மேற்கு தொகுதிக்குட்பட்ட சேலம் மாநகராட்சி மூன்றாவது கோட்டம் ரெட்டியூரில் துவங்கி வன்னியர் நகர், ஏரிக்காடு, லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக சாலை வசதிகள் சாக்கடை வசதிகள் குடிநீர் வசதிகள் குறித்து பொதுமக்களிடையே கேட்டறிந்தார். மேலும் தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்ததை அறிந்த பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர். வழி நெடுகிலும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். இந்த நன்றி அறிவிப்பு ஊர்வலத்தின் போது பசுமை தாயக மாநில இணைச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் ஆட்டோ சின்ன தம்பி இளைஞரணி விஜி உள்ளிட்ட பாமகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.