• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குலசேகரன் கோட்டையில் மீனாட்சிஅம்மன் -சுந்தரேஸ்வரர் தேரோட்டம்

ByN.Ravi

Apr 24, 2024

வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விடிய விடிய நடந்தது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரு கே பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோயி லில் சித்திரை திருவிழா 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. அதன் பின் தினந்தோறும் மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். 19-ந்தேதிவெள்ளிக்கிழமை அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 20ந் தேதி சனிக்கிழமை 108 முளைப் பாரி மற்றும் 108 சீர்வரிசை தட்டுடன் ஊர்வல நடந்தது. 21ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
22 ஆம் தேதி திங்கள் கிழமை நேற்று மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்திற்கு, சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், சப் இன்ஸ்பெக்டர்கள் மாயாண்டி, அழகர்சாமி, பயிற்சி சப் இன்ஸ் பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த தேரோட்டத்தில், சுந்தரேஸ்வரர் மஞ்சள் நிற பட்டுடுத்தியும், மீனாட்சி அம்மன் பச்சை கலர் பார்டரில் சிவப்பு பட்டுடுத்தி மலரனை அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து அருள் பாலித்தனர். குலசேகரன் கோட்டையிலிருந்து புறப்பட்டு வல்லவ கணபதி கோயில், வி.எஸ். நகர், பிள்ளை பாறை மண்டு, ஆரோக்கிய அன்னை திருத்தலம், பழைய தாலுகா அலுவலகம், ராமநாயக்கன்பட்டி,போடிநாயக்கன் பட்டி, திடீர் நகர், சாந்தி நகர், சந்தை பாலம்,பஸ் நிலையம், அரசு மருத்துவமனை,தாதம்பட்டி நீரேத்தான் மந்தை, சொசைட்டி தெரு, சடையாண்டி கோயில், மேட்டு பெருமாள் நகர்,காவல் நிலையம், பழைய சார் பதிவாளர் அலுவலகம், ஊராட்சிஒன்றிய அலுவலகம், மீனாட்சி நகர், மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகாலை 4.30 மணிக்கு கோயிலை வந்து அடைந்தது.
இதன் ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி குழு தலைவர் ஏடு. ராதாகிருஷ் ணன்
தலைமையில் திருப்பணிக்குழுவினர் மற்றும் குலசேகரன் கோட்டை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.