• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா… அவரே பதிவிட்ட வீடியோ..!!

Byகாயத்ரி

Sep 29, 2022

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெற்றி பயணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார் .

சிறுவயதில் இருந்து நடித்துவரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.இடையில் தான் ஈடுகட்ட முடியாத இழப்பு நேரிட்டு. அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார், அவருக்காக அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.கணவர் இழப்பை தாங்க முடியாத மீனா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வெளியே வருகிறார். அவ்வப்போது தனது கணவர் குறித்த பதிவுகள் போட்டு வருகிறார். தற்போது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்துள்ள மீனா தனது நெருங்கிய தோழியுடன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். உற்சாகமாக தற்போது மாறி இருக்கும் மீனாவிற்கு அவரது ரசிகர்கள் பாஸிடிவ் கமென்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.