திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கொடைக்கானல் தாலுக்காகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாலுக்கா சமரசத் தீர்வு மையங்களின் (TALUK MEDIATION SUB CENTRES) திறப்பு விழா இன்று காணொளி வாயிலாக காலை 10.00 மணியளவில் திறக்கப்பட்டது.

திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி A.முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆத்தூர் மற்றும் கொடைக்கானல் தாலுக்காகளில் புதிதாக அமையப் பெற்ற தாலுக்கா சமரசத் தீர்வு மையங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொளி வாயிலாக திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் S.M.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், G.K.இளந்திரையன், D.பரத சக்கரவர்த்தி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் காணொளி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலிருந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களிலிருந்து நீதிபதிகள், சமரச வழக்கறிஞர்கள்(Mediators), வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








