• Thu. May 14th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் “மேகார்னிவல் 2026” தொடக்கம்..,

BySeenu

May 14, 2026

ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மேகார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி மே 14 முதல் 16, 2026 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த ஆண்டு விழிப்புணர்வு முயற்சி, பொதுமக்களிடையே வாய்நலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பல்வேறு நவீன பல் சிகிச்சைகள் குறித்த தெளிவான தகவல்களை வழங்குகிறது.

நிகழ்ச்சியை டாக்டர் சுந்தர்ராமகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மற்றும் நரேந்திரன் சௌந்தரராஜ், இணை நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திரு. சி.வி. ராம்குமார், தலைமை செயல் அதிகாரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை, திரு. மகேஷ்குமார், தலைமை நிர்வாக அதிகாரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை, டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவ இயக்குநர், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, டாக்டர் எஸ். அழகப்பன், மருத்துவ கண்காணிப்பாளர், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் டாக்டர் ஜெ. தினகர், முதல்வர், ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியோர் கலந்து கொண்டனர்.

“மேகார்னிவல் 2026” நிகழ்ச்சியில் வாய்நல விழிப்புணர்வு சொற்பொழிவுகள், பல் சிகிச்சை கண்காட்சிகள், விழிப்புணர்வு விளையாட்டுப் பகுதிகள், சரியான பல்துலக்கும் முறைகள் குறித்த நேரடி விளக்கங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மேலும், நிகழ்ச்சியில் பதிவு செய்யும் பொதுமக்களுக்கு இலவச பல் மருத்துவ வெளிநோயாளர் பதிவு அட்டை வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட பல் சிகிச்சைகளுக்கு மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 20 சதவீத சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. “மேகார்னிவல் 2026” பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.