

மதுரை தவிட்டு சந்தையில் உள்ள மதிமுக இலக்கிய அணி செயலாளர் உதயகுமார் மகன் முகிலன், ஸ்ரீவைஸ்ணவி திருமண வரவேற்பில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் துறைவைகோ செய்தியாளர் சந்தித்தார்.
மதுரையில் மதிமுக துரை வைகோ பேட்டி..

சகோதரர் அண்ணாமலைக்கும், சகோதரர் உதய நிதிக்கும் கால் புணர்ச்சியால் ஏற்பட்ட போட்டி அல்ல.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையா இல்லை மாணவர் செல்வங்கள் இன்றைக்கு வாழ்க்கையில் உயர்வதற்கு காரணமான இரு மொழிக் கொள்கையா என்பதுதான் பிரச்சனை.
அண்ணாமலை என்ன சொல்கிறார் என்றால் உங்கள் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்கிறார். பாஜகவை தவிர அனைத்து இயக்கங்களும் அதிமுக உட்பட எல்லோரும் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் வேண்டும் என கூறுகின்றனர்.
இதனால் தான் நாம் உயர்ந்திருக்கிறோம் இதற்கு காரணம் இரு மொழிக் கொள்கைதான் என்று எல்லோரும் உறுதியாக நிற்கிறோம். ஒரு விஷயத்தை பாஜக தலைவர்கள் பேச மாட்டார்கள்.
பத்து வருஷமா வட மாநிலங்களில் ஆங்கிலம் இருக்கவே கூடாது என பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இன்றைக்கு இளைஞர்கள் மருத்துவம் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஆங்கிலம் பன்மொழி திறன் இருக்கும்போது தான் இந்த வாழ்க்கையில் உயர்கிறார்கள் தமிழர்கள்.
பல்வேறு துறைகளில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் ஆங்கில புலமைதான் காரணம். இன்றைக்கு இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து கை விலங்கு போடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
வட இந்தியர்கள் தான் பெரும்பான்மையோடு இருக்கிறார்கள். தமிழர்கள் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் உயர்கல்வி போகும் விகிதம் 50 சதவீதம் உள்ளது. இன்றைய பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் உள்ளனர். இன்றைக்கு மூன்றாவது மொழி எதற்கு. விருப்பப்பட்டு எது வேண்டாலும் படித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள் இதற்கு முன்பு மூன்றாவது மொழியாக எந்த மொழியாக இருக்கலாம் என சொன்னார்கள். இப்போது இந்தி இருக்க வேண்டும் என சொல்கிறார்கள்.
மூன்றாவது மொழி உலக மொழியாக இருக்கட்டும். ஏன் அது இந்தி மொழி என சுருக்குகிறீர்கள். மொழியை வைத்து அரசியல் ஆக்குவது பாஜக மட்டும் தான். நாங்கள் அரசியல் ஆக்கவில்லை -மதிமுக துரை வைகோ.
நேத்து ராகுல் காந்தி சொல்கிறார். வட மாநிலங்களில் பாஜக பிரச்சாரத்தில் ஆங்கிலம் வேண்டாம் என கூறுகிறார்கள். வறுமை மாணவர்கள் பின்தங்கி இருக்க வேண்டும் என இதை தெரிவிப்பதாக தெரிகிறார்.
நமது முதலமைச்சர் நிதி கேட்டுள்ளார். அவர்கள் நிதி கொடுக்கவில்லை என்றால், அனைத்து துறைகளிலும் நிதி பற்றாக்குறை உள்ளது. இது கூடுதல் நிதி சுமை தான். கடந்த பத்தாண்டுகளாக வர வேண்டிய நிதி வரவில்லை.
பாஜக இல்லாத அரசியல் கட்சிகளின் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிதியை கொடுக்காமல் இருப்பது அதன் பெயரில் மக்களிடையே அவபெயரை ஏற்படுத்தும் விதம் அரசியல் ஸ்டேட்டஸ் ஆக செய்கிறார்கள்.
கடந்த ஒரு காலத்தில் பாலியல் பிரச்சனை நிறையாக உள்ளது. அரசு பள்ளி தனியார் பள்ளிகளில் நடைபெற்று உள்ளது தவறை பொறுத்தவரைக்கும் பல்வேறு போதை பொருள் விளக்கமாக இருக்கட்டும், தனிமனித ஒழுக்கம் வேண்டும். அரசும் காவல்துறையும் சட்டதிட்டங்கள் வைத்துள்ளது.
பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனையாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் விழிப்புணர்வு மற்றும் கடுமையான சட்டங்களையும் கொண்டு வர முடியும். டெல்லியில் சட்ட ஒழுங்கு, காவல்துறை ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.. வெளிநாட்டில் அங்குள்ள டான்களிடம் தான் இந்த கட்டுப்பாடுகள் உள்ளது.
சட்டத்தை வலுப்படுத்த சொல்கிறீர்கள். கடுமையான சட்டங்களை தற்போது அரசு மாற்றியுள்ளது. மாற்றங்கள் மக்களிடமிருந்து ஏற்படுத்த வேண்டும். மதிமுக வில் ஆக்சிடென்ட் பொலிடிசியன் நான் கால சூழலில் அரசியலுக்குள் நான் வந்திருக்கிறேன். எங்களுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது கூட்டணியில் இருக்கிறோம்.
நான் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும் போது எங்களுடைய தனித்தன்மையில் காரணமாகத்தான் நான் நின்றோம். நான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை கட்சி நிர்வாகிகள் தான் என்னை இழுத்து வந்தார்கள். அமெரிக்காவில் இருந்து 300 பேர் கை விளங்கு போட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
சாதி மத அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ்நாட்டை பயன்படுத்தியது மதுரையில் மதவாத பிரச்சனை உருவாக்க பார்த்தார்கள்.. பாஜகவை எதிர்க்கிற வல்லமை திமுகவிற்கு இருக்கிறது. பாஜக மதவாத சக்திகள் வேரூன்ற கூடாது என்பதற்காக நாங்கள் திமுகவில் கூட்டணியில் இருக்கிறோம். திருப்பூரில் நடந்த சம்பவம் வடிவமைப்பு இந்தியாவில் இருந்து வந்தவர்களாலே செய்யப்பட்டது என துரை வைகோ கூறினார்.

