சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு இளைஞர்கள் சார்பாக ஐந்தாம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பன்
கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாயாண்டி மந்தை கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரும்பாடி இளைஞர்கள் சார்பாக 5ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது.
முன்னதாக சாமி பெட்டி தூக்கி கிராமத்தின் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது ஆங்காங்கே பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)