நேற்று திருமுக்குலத்தில் நீச்சல் அடிக்கும் போது மூச்சு திணறி இறந்த குருநாதன் சாவுக்கு வந்தவர் தனியார் மது பாரில் வைத்து கொலை.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் விசாரித்து சந்தேகத்துக்கிடமான நாலு பேர் மீது வழக்கு பதிவு….
சிவகாசி சித்ராஜாபுரத்தைச் சேர்ந்த சித்ராதேவி. இவரது கணவர் பெயர் மாயன் (வயசு 27 .) மாயன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோர்கள் திருவில்லிபுத்தூர் திருமுக்குளம் வடகரையை சேர்ந்த குருநாதன் என்பவர் இறப்பு நிகழ்விற்க்கு வந்ததாகவும், பின்னர் சங்குரணி ஓடை தெருவில் உள்ள தனியார் பாரில் மது அருந்திவிட்டு மேற்படி நபர்கள் வெளியே செல்லும்போது, அங்கு நாலு பேரிடம் வாய்தகராறு ஏற்பட்டதாகவும், உள்ள விக்னேஷ்சை அவர்கள் நான்கு பேரும் சேர்த்து கையால் தாக்கியதாகவும், பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகவும், நான்கு பேரும் விரட்டியதாகவும், அப்போது மாயன் வமட்டும் ஓடமுடியாமல் நின்றதாகவும், சிகப்பு சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்த ஒருவர் மற்றும் மூன்று பேர் சேர்ந்து மாயனை இழுத்து கையால் அடித்து பார் அருகில் உள்ள சந்திற்கு இழுத்து சென்றதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதாகவும், விக்னேஷ், மாயனை பார்த்தபோது பேச்சு மூச்சு இன்றி கிடந்ததாகவும், உடனே மாயன் மனைவி சித்ரா தேவிக்கு தகவல் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு கொண்டு சென்றதாகவும், மாயனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி, மாயன் இறப்பை உறுதி செய்ததாகவும், உடனடியாக சித்ராதேவி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை வந்து பார்த்து விட்டு பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் வந்து தனது கணவர் மாயன் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்திற்கு இடமான நான்கு பேர் மீது விசாரணை செய்து வருகின்றனர்