• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தின கிராம சபை கூட்டம்

Byp Kumar

May 1, 2023

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கார்சேரிகிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கார்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரிஇளவரசன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையிலும் ஊராட்சி செயலர் சுரேஷ் தீர்மானங்கள் வாசித்தார் இந்த கிராமசபை கூட்டத்தில் கார்சேரிஊராட்சி சக்கிமங்கலம் கிராமம்ஊரணியினை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும்கிராமத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக ஆறு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் மற்றும் கார்சேரி கிராமத்திற்கு புதிய பஞ்சாயத்து அலுவலகம் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அந்த கிராம சபை கூட்டத்தில் கிராம பொதுமக்கள் ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல் அடிப்படை வசதிகளை விரிவாக்கம் செய்தல் பற்றி பொதுமக்களிடம் அரசு அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டதுஅதனைத் தொடர்ந்து கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமிகாசிராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர் அதில் 3வது வார்டு உறுப்பினர் அழகுமணி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்