• Tue. Dec 10th, 2024

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் மாபெரும் பேரணி….

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மை இந்தியா இருவார கால கொண்டாட்டம் நடத்தப்பட்டது. நிறைவாக மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் மகாத்மா காந்தியடிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை நம்முடைய தூய்மை பணிகளை நாமே மேற்கொள்வது, வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு தூய்மைப் பணியின்போது உதவுவது என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி சேலம் சந்திப்பு ரயில் நிலையம் முன்பிருந்து தொடங்கி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், ரயில்வே பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.