மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை புறநகர் மேற்குமாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கேட்டு கடையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஏழை தலித் மக்களிடம் ஒப்படைப்பு செய்யவும், அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறந்து விவசாயிகளை காப்பாற்றவும், பாலமேட்டில் அமைந்துள்ள மடத்துக்கமிட்டியை அரசு கையகப்படுத்தவும், அலங்காநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை விளையாட்டு மைதானம் குடிநீர் வசதியை நவீனப்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். தொகுதி துணைச் செயலாளர் அரியூர் ராமச்சந்திரன், அமைப்பாளர் மணிமொழியன், மாவட்டத் துணைச் செயலாளர் விடுதலை வீரன், உசிலம்பட்டி தொகுதி செயலாளர் மூக்கையா முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் எர்ரம்பட்டி பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைப்புச் செயலாளர் எல்லாளன் ,துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், பஞ்சமி நில உரிமை மீட்பு இயக்க மாநில செயலாளர் சசி பொன்னானை, முன்னாள் மாவட்ட செயலாளர் அலங்கை செல்வ அரசு ,மாநில துணைச் செயலாளர் அழகுமலை ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் இதில் மதுரை மாவட்ட செயலாளர்கள் அரச. முத்துப்பாண்டியன் தீபம் சுடர் மொழி ,ரவிக்குமார் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். அலங்கை பேருர் செயலாளர் லட்சுமணன் நன்றி தெரிவித்தார்.