புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் வடக்கு, தெற்கு சார்பாக மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்தும், இந்திய பிரதமர் மோடி ராமநாதபுரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்ததை எதிர்த்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கருப்பு கொடி ஏந்தி மோடிக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய காங்கிரஸ் மாவட்ட உறுப்பினர்கள் சிறுபான்மை உறுப்பினர் சேர்ந்த இப்ராஹிம் பாபு, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ராஜா, முஹம்மது மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் நகர கழக நிர்வாகிகள் அனைவரும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கொடுக்க வேண்டிய 4000 கோடி ரூபாயை கொடுத்திட வேண்டும். மொழிக் கொள்கையை திணித்திடாதே இருமொழிக் கொள்கையை தாய்மொழி தமிழ் அடிப்படை மொழி ஆங்கிலம் போதுமானது. மத்திய அரசு தரவேண்டிய 4000 கோடியை உடனடியாக கொடுத்துவிட வேண்டும். இதனை வைத்து மும்மொழி கொள்கையினை திணிக்க ஒருகாலும் சம்மதிக்க மாட்டோம். 100 நாள் வேலை திட்டத்தில் கொடுக்க வேண்டிய பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உடனடியாக கொடுக்க வேண்டும். வக்புவாரிய சட்டத்தை உடனடியாக நிறைவேற்றியதை வாபஸ் பெற வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.