நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அருகே இருக்கக்கூடிய கடைகளுக்கு பரவி பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதி செயல்பட்டு வருகிறது.இங்கு தினசரி சந்தை, ஜவுளி வியாபாரம்,நகைக்கடை, மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் துணி கடையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் தீயானது அருகில் இருக்கக்கூடிய கடைகளுக்கு மளமளவென பரவத்தொடங்கி சுமார் 10 கடைகளுக்கு மேல் தீ பரவியது.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் தீ நீண்ட நேரம் எரியத் தொடங்கியது.
உடனே சம்பவ இடத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் எந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.