• Thu. Apr 24th, 2025

இரவில் பெரிய கரடி குடியிருப்பு பகுதியில் உலா வந்த CCTV காட்சி பதிவு…

ByG. Anbalagan

Mar 27, 2025

சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை பெரிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக குடியிருப்பு பகுதிகள்,தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரத்தொடங்குவதோடு மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இரவு நேரத்தில் கோத்தகிரி பஜார் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இரவு நேரத்தில் பெரிய ஒற்றை கரடி உலா வந்துள்ளது. இந்த காட்சி குடியிருப்பு வாசிகள் CCTV கேமரா பதிவான நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.

எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.