• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டெல்லி பல்ஸ்வா குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து

ByA.Tamilselvan

Apr 27, 2022

பல்ஸ்வா குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக தலைநகர் டெல்லியே புகை மண்டலமாக மாறியுள்ளது
டெல்லி வடக்கு பகுதியில் அமைந்துள்ள பல்ஸ்வாவில் இருக்கும் குப்பை கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
. தகவலறிந்த தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பட இடத்துக்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், குப்பை கிடங்கில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளும், தீ விரைவில் பரவக்கூடிய கழிவுகளும் அதிகளவில் இருந்ததால் தீ வேகமாக கிடங்கு முழுவதும் பரவியது. மேலும் 3 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 13 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் சவாலான பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
குப்பை கிடங்கிற்கு அருகாமையிலேயே குடியிருப்புகள் இருந்ததால் அங்கு பரவவிடாமல் தடுக்க கடுமையாக போராடினர். விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்ஸ்வா உட்பட வடக்கு டெல்லி முழுவதும் புகைக்காடாக மாறி இருக்கிறது. நேற்று மட்டும் இதேபோல் டெல்லியில் 3 இடங்களில் தீ விபத்துகள் பதிவாகி இருக்கின்றன.

டெல்லி பலாஸ்வா டம்ப் யார்டில் பெரும் 🔥தீ விபத்து