திண்டுக்கல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
பாண்டிச்சேரி சேர்ந்த சாந்தி(50) இவர் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்கு வந்தார்.

நந்தவனப்பட்டி பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது
இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 2.1/2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.




